Wednesday 13 November 2013

முதுகு வலியைக் குறைப்பதற்கான சில எளிய வழிகள்!!!

இரவில் நல்ல ஆழ்த உறக்கம் தேவை

இரவில் நன்றாக தூங்குவது முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரும். தூக்கமின்மை கூட முதுகு வலி ஏற்படுத்தும். நல்ல அமைதியான தூக்கம் கிழிந்த தசைகளையம் வீக்கமுற்ற இனைப்புகளையும் சரி செய்து விடும். நீங்கள் நல்ல மெத்தையில் உறங்க வேண்டியதும் அவசியம். கடினமான மெத்தையில் உறங்கினால் வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதலால் நல்ல மெத்தையை தேர்ந்தெடுக்கவும், வேறு வேறு நிலைகளில் உறங்கவும் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வசதியான நிலையை கண்டறியுங்கள். முதுகெலும்பை வளைந்த நிலையில் வைத்து உறங்குவதை தவிர்க்கவும்.

வைட்டமின்கள்

முதுகு வலியை சரி செய்யும் முயற்சியின் அடுத்தபடியாக, போதுமான அளவு வைட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு பி வைட்டமின் எடுத்துக் கொள்வது முதுகு வலியை பெருமளவு குறைத்து விடும். மத்திய நரம்பு மண்டலம் மற்றும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும்; தருவது வைட்டமின் பி-யின் வேலையாகும். ஓமெகா 3 என்ற கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மக்களால் முதுகு வலியிலிருந்து மீண்டு வர முடியும்.

.உடற்பயிற்சி

உடலை சரியான முறையில் பராமரித்தால் முதுகு வலியை சரி செய்ய முடியும். தளர்ந்த வயிற்றுப் பகுதி மற்றும் பின் தசைகள் தான் முதுகு வலியை தருபவை. ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது உடற்பயிற்சி தசைகளை விரிவடையச் செய்து, அவற்றை ஓய்வு நிலைக்கு கொண்டு வருகிறது. ஏரோபிக் செய்தோ மற்றும் உங்கள் தோட்டத்தில் நடைபயிற்சி செய்தோ, முதுகு வலியை ஓட ஓட விரட்டலாம். மேலும் இது மனதையும் அமைதிப்படுத்தும்.

முதுகுக்கு தேவை மசாஜ்

உங்கள் முதுகுப் பகுதியில் ஒரு நல்ல மசாஜ் செய்வதன் மூலம், முதுகு வலியை நிறுத்தவும் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறுவும் முடியும். இதற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், எனவே உங்கள் பாக்கெட்டை பணத்தால் முதலில் நிரப்புங்கள். அப்படி பணம் இல்லையானால், ஒரு டென்னிஸ் பந்தைக் கொண்டு வலியுள்ள இடங்களில் மசாஜ் செய்தால் அது மிக அற்புதமாக இருக்கும்.

வேண்டாமே புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. எனவே, உங்களுடைய முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுங்கள். இதனால் நுரையீரல் மற்றும் இதைய கோளாறுகள் உயர் அழுத்தம் போன்ற பிற நேய்களும் வர வாய்ப்புகள் உள்ளன. முதுகு வலியானது, புகை பிடிக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கே அதிகம் வரும் என்பது ஆய்வுகள் வழியாக தெரிய வந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் முதுகு வலியை வரவழைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால் முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுவது நல்லது

No comments:

Post a Comment