”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையே னும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டா ர் ஆசிரியை.
எல்லா
மாணவர்களும் ஒரே குரலி ல் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில்
அழைத் த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்க வும் முடியாத அளவுக்கு எத்தனை
கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத் தவன்
‘பதினைந்து’ என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின்
மூலையில் இருந் த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ”நீங்கள் சொன்ன
எண்ணிக் கைப்படி, கூடையில் உள்ள தக்கா ளிகளை எடுத்து, உங்களுக்குக் கொ
டுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்” என்றார். மாணவர்களும் தங்களது
பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ”இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக் க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டி னர்.
ஓரிரு
நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள்
அழுகி நாறத்துவங்கின. நாற்றம் அடிக் கும் மூட்டையுடன் வெளியே செல்ல
மாணவர்கள் கூச்சப் பட்டனர். ஒரு கட்டத்தில்… ஆசிரியையிடம் சென்று,
மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்ட னர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ”நாற்றம் வீசுபவை தக்காளி மட்டு மா..?
அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள்
மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து
மன்னித்து விடு வதாக இருந்தால் ,தக்கா ளியையும் தூக்கி எறியுங்கள்”
என்றார்!மாணவ ர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.
No comments:
Post a Comment