Tuesday 29 October 2013

மன்னிக்க முடியாத கோபம், யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?

”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையே னும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டா ர் ஆசிரியை.
எல்லா மாணவர்களும் ஒரே குரலி ல் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத் த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்க வும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத் தவன் ‘பதினைந்து’ என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந் த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ”நீங்கள் சொன்ன எண்ணிக் கைப்படி, கூடையில் உள்ள தக்கா ளிகளை எடுத்து, உங்களுக்குக் கொ டுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்” என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ”இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக் க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டி னர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத்துவங்கின. நாற்றம் அடிக் கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப் பட்டனர். ஒரு கட்டத்தில்… ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்ட னர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ”நாற்றம் வீசுபவை தக்காளி மட்டு மா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடு வதாக இருந்தால் ,தக்கா ளியையும் தூக்கி எறியுங்கள்” என்றார்!மாணவ ர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

Wednesday 23 October 2013

சமையல் குறிப்பு – மைசூர் பாகு

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கோப்பை
சர்க்கரை – இரண்டரை கோப்பை
நெய் – 2 கோப்பை
செய்முறை:
கடலை மாவை லேசாக வறுத்துக் கொ ள்ள வேண்டும். நெய்யை அடுப்பில் வைத்துசுட வைத்துக் கொள்ள வேண்டு ம். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்க வேண்டும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும். இது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண் டும். ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும். பினனர் சூட்டோடு சூடாக அதை வேண்டிய அளவில் குறுக்கும் நெடுக்குமாக கத்தியால் கீறி பிரித்து வையுங்கள் பின் ஆறிய பிறகு மைசூர் பாகு துண்டு துண்டாக அழகாக உங்கள் கைகளில் எடுத்து நீங்கள் சுவையுங்கள் மற்ற‍வர்களுக்கு சுவைக்க‍ தாருங்கள்

Friday 18 October 2013

மருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்” என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்படப்போகிறது.
 
தம் மனைவியின் பிறந்தநாள் பரிசாக ஒரு புடைவை வாங்க அந்தக்கடைக்குள் நுழைகிறார் கணவ ர். புடைவையை விற்பனையா ளர் பிரித்துக் காட்டும்போது பா க்கெட்டிலிருந்து ஒரு கண்ணா டியை எடுத்து அணிந்து கொண் டு வீட்டிலிருக்கும் மனைவியி டம், ‘இது பிடிச்சிருக்கா?’ என் கிறார். கணவர் கூகுள் கிளாஸ் வழியே பார்க்கும் அந்தப் புடைவையை அவர் மனைவி வீட்டிலிருந்தே தம் லேப்டாப்பில் பார்க்கிறார். ‘இதன் பார்டர் சரியில்லை. பின்னால் அலமாரியிலிருக்கும் மயில் கழுத்து கலர் புடைவையைக் காட்டச் சொல்லுங் கள்’ என்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் கூகுளின் உதவியால் இப்படித்தான் ஷாப்பிங் இருக்கப் போகிறது.  
 
சாதாரண மூக்குக்கண்ணாடி போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுள் கிளாஸில் வலது கண்ணின் விழிக்கு மே ல் ஒரு நீண்ட செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட லென்ஸும் வலது கா தருகில் ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட குட்டி கம்ப்யூட்டரும் இருக் கிறது. அணிந்து கொண் டிருப்பவர் பார்ப்பதை இந்த கம்ப்யூட்டர் அதன் தொடர்பிலிருக்கும் கம்ப்யூட்டர்களி ன் திரைகளில் காட்டுகிறது. இந்தக் குட்டி கம்ப்யூட்டருக்கு கட்டளைக ளை கூகுள் கண்ணாடி அணிந்திரு ப்பவர் குரல் மூலம் கொடுக்கலாம். இதனால் அவர் பார்ப்பதை அவர் விரும்புபவர் பார்க்கச் செய்யலாம். அடுத்த ஆண்டு மார்க்கெட்டுக்கு வர ப்போகும் இந்த கூகுள் கண்ணாடிக்கருவி கடந்த இரண்டு ஆண்டுகளாக ப் பரிசோதனையில் இருந்தது. உலகின் பல பகுதிகளில் 8000 பேர் களுக்கு வழங்கி அவர்களின் கரு த்தைக் கேட்டுச்சிறப்பாக வடிமை த்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
முதல் கட்டமாக 2000 பேருக்குக் கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் சிவா திருமழிசை. சென்னையிலுள்ள ‘லைப்லைன்’ மருத்துவமனையின் தலைவர் ராஜ்குமார் அவரது நண் பர். அவரை அணுகியபோது மருத்துவ த்துறையில் புதிய டெக்னாலஜியை விரும்பும் அவர் உடனே சம்மதி த்தார். கூகுள் கிளாஸ் அறிமுக நிலையில் இருப்பதால் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும் வசதியைக் கொண்டிருந்த தொழில்நுட்பத்தில் தேவையான மாற் றங்களைச் செய்து, அரை மணிக்கும் மேல் பார்க்கும்படி மாற்றி அமைத்தார். டாக்டர் ராஜ்குமார் அதை அணி ந்துகொண்டு இரண்டு ஆப்ரேஷன்களைச் செய்தார். இதை கூகுள் கிளா ஸ் வழியே பெரிய திரையில் மருத்துவ க் கல்லூரி மாணவர்களும், பத்திரிகை யாள ர்களும் பார்த்தனர்.
 
ஆபரேஷன் செய்யும்போது நான் பார்க் கும் பகுதியை நீங்கள் பார்க்கிறீ ர்களா?” என அவர் கேட்டது காட்சியுடன் தெளி வாகக் கேட்டது. மருத்து வத் துறைக்கு இது வரப்பிரசாதம். ஆபரேஷன் தியேட்டருக்குள் என்ன நடக்கிறது என்று உறவினர்கள் வீட்டிலிருந்தே பார்க்க, ரிகார்ட் செய்ய முடியும்,”  .