Showing posts with label கருப்பை. Show all posts
Showing posts with label கருப்பை. Show all posts

Thursday, 14 November 2013

கருப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி!



மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும். பொ துவாக மாத விலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற் படும். மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக் கும். 
மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடுவது கடினம். மாத விலக் கு சுழற்சி 28-30 நாட்கள் உள்ளவர்களுக்கு மாத விலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்க ளுக்குள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிக ம். சுருக்கமாக: விந்தணுவும், சினை முட்டை யும் ஒன்று டன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக் கப்படுகிறது.
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொரு முறை உறவு கொள் ளும்போதும் அவனிட மிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிற து. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள் ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது.
ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளி ப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண் ணுடைய சினைமுட்டையை தேடிச் செல்லுகின்றது.
ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப் பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப் படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருவுற்ற முட்டை யாகும்.
கருவுற்ற முட்டை கர்ப்பப்பை குழா ய் என அழைக்கப்படும் பலோப்பி யன் குழாய் FALLOPIAN TUBE ஊடாக கருப்பையை சென்ற டைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளர ஒரு பெண்கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக் குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது.
இதன்மூலமாக அந்த கருவுக் குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடை பெறுகிறது கர்ப்பம் தரி த்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத் தண்டு வடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன. கர்ப்பம் தரித்த 30ம்நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன.
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன. கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது. கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்கு ள் கொண்டுவருகிறது. கருவுற்ற 7-வது வார ம் முதல் பற்க ளின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. 

மேலும் பால்பற்கள் முளைப்பத ற்கான அறிகுறிகள் தென்படும் .கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென் படும். மேலும் அனைத்து அங்கங்களு ம், உறுப்புக்களும் கண்டறியப்ப டுகிறது கருவுற்ற 9-வதுவாரத் தில் குழந்தையி ன் கை விரல்க ளில் ரேகைகள் படர ஆரம்பிக்கி றது.
பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது. கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகி றது.கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள் கிறது. பிறகு விழிக்க கற்றுக் கொள்கிறது.
இறுதியாக சிறுநீர் கூட கழிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவத ற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது! கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பி க்கின்றன.
மேலும் நாக்கில் ருசியை அறியக் கூடிய நரம்புகள் வேலை செய்கின்ற ன.கருவுற்ற 14-வது வாரத்தில் குழந் தையின் செவி ப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவு கள் தென்படுகின்றன.
குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்க ள் தங்கள் ஆய்வில் கூறுகிறார் கள்.கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றி னுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட் கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் கூறு கிறார்கள்.
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றா க வெளிப்படுகின்றது. கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வைசுரப்பிகள் முளைக்க ஆரம் பிக்கின்றன. மேலும் உடலி ல் முடிகள் முளைப்பதற்கா ன செயல்பாடுகள் நடை பெறுகின்றன
கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது. க ருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தை யின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கரு வளர்ச்சியை முழுவதுமாக அடை ந்து குழந்தை இந்த உல கில் காலடி எடுத்துவைக்க தயாராகி விடுகிற து.